Thursday 14 May 2009

என் சிந்தனைத்துளிகள் 3

மனித மனம்

நீங்கள் எப்போதாவது ஒரு இடத்தில் நிலையாக அமைதியாக இருந்ததுண்டா? அந்த அனுபவத்தை உங்களால் விபரிக்க முடியுமா ? அதைவிட ஆனந்தமான விடயம் எதுவுமே இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. கட்டாயம் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள் . ஆனால் இந்த இயந்திர வாழ்க்கையில் அந்த உணர்வுகளுக்கு ஆழமான முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டீர்கள். இல்லையென்றால் ஒருமுறை செய்துதான் பாருங்களேன்.

உங்கள் மனத்திற்கு எந்தக் கட்டுப் பாட்டையும் விதிக்காதீர்கள். ஆனால் அது அலை பாயும் விதத்தை மட்டும் அவதானியுங்கள். 'மனம் ஒரு குரங்கு ' என்று ஏன் சொல்லி வைத்தார்கள் என்பதை உணர்வீர்கள். உங்கள் மனம் கொப்புக்கு கொப்பு தாவும் குரங்கு போல ஒரு விடயத்திலிருந்து மற்றதுக்குத் தாவித் தாவித் திரிவதை உங்களால் ரசிக்க முடியும். ஒரு நதி ஓடுவதைப் போல ஒரு பிரவாகமாக மனம் ஓடிக்கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். அந்த நதியில் பலர் நீராடுவார்கள், குழந்தைகள் விளையாடுவார்கள், மீன்கள் ஓடிக் கொண்டிருக்கும், பூக்களும் இலைகளும் மிதந்து வரும் .............இதைப் போல உங்கள் மனதும் அலை பாய்ந்தபடியே இருக்கும். பாவம் அதற்கு ஓய்வு என்பதே கிடையாது. ஒரு தாயின் மனம் தன் குழந்தைகளைப் பற்றியும் ,ஒரு பெண்ணின் மனம் தன் காதலைப் பற்றியும்,ஒரு வர்த்தகனின் மனம் தன் இலாபத்தைப் பற்றியும் ...அசை போட்டபடியே இருக்கும்.
இந்த நிலயை ' Mental vacum ' சொல்வார்கள் . இந்த நிலையில் மனத்தினால் பலதையும் அலச முடியுமே தவிர எந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணும் சக்தி இருக்காது. நிர்மலமான சலனமில்லாத மனங்களினால்தான் ஒரு தீர்வு காண முடியும். இதைப்பற்றித் தான் பலர் புத்தகம் புத்தகமாக எழுதுகிறார்கள். மனதைக் கட்டுப் படுத்துவதும் ,தியானிப்பதும் எங்கள் மனதை நிர்மலமாக்கும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் எனக்குத் தெரியாத விடயங்கள். எனக்குத் தெரிந்தெதெல்லாம் என் அழகான அலை பாயும் குரங்கு மனதுதான்.
.

6 comments:

  1. // எனக்குத் தெரிந்தெதெல்லாம் என் அழகான அலை பாயும் குரங்கு மனதுதான். //

    அருமை.

    ReplyDelete
  2. மனித மனதை பற்றி எளிய முறையில் சொல்லியிருக்கிறீர்கள்...
    நீங்கள் உளவியல் படித்தவரா...?

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி புதியவன். உங்கள் கேள்வியை வாசித்து சிலகணம் சிரித்தேன். உளவியல் படித்தவர்களுக்கு மட்டும் தான் இப்படிப் பைத்தியக்கார எண்ணங்கள் வரும் என்று நினைக்கிறீர்களா? ha ..ha..ha

    ReplyDelete
  4. நன்றி வசந்த். நீங்கள் என் கருத்தை அருமை என்கிறீர்களா? அல்லது என் குரங்கு மனத்தை அருமை என்கிறீர்களா? நான் குழம்பிப் போனேன்.

    ReplyDelete
  5. உங்கள் கருத்தும் அருமை . உங்கள் குரங்கு மனதை அழகு என்று வர்ணித்ததும் அருமை .
    போதுமா ?

    ReplyDelete
  6. விளக்கம் போதும் வசந்த். நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!