Wednesday 13 May 2009

மனதில் நிற்பது

தலையிடி காய்ச்சல் வந்தால்
மலையடிவாரக் கல்லை
வண்டிலில் ஏற்றி வந்து
தலையதைக் கீழே வைத்து
கல்லதை மேலே வைத்தால்
தலையிடி காய்ச்சல் எல்லாம்
தவிடுபோல் பறந்திடுமே.

பிற்குறிப்பு
சின்ன வயதில் அடிக்கடி என் அப்பா சொல்லிக் கேட்டது இது.

6 comments:

  1. இப்படி ஒரு வைத்தியத்தை நான் கேள்விப் பட்டதில்லை எனக்கு இது புதிது...

    ReplyDelete
  2. தலையே தவிடாய்ப் போனபின்பு தலையிடியும் தாவிடாய்ப் போய்விடும் என்பது தான் என் விளக்கம். ஆனால் இந்த நகைச் சுவையை ரசித்து ஒரு நிமிடம் சிரித்தால் தலையிடி தாவிடாய்ப் போய் விடும் என்பது என் அப்பா தந்த விளக்கம்.
    ஒருவேளை என் அப்பாவே இதை இயற்றினாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

    ReplyDelete
  3. தலையிடி காய்ச்சல் வந்தால்
    மலையடிவாரக் கல்லை
    வண்டிலில் ஏற்றி வந்து
    தலையதைக் கீழே வைத்து
    கல்லதை மேலே வைத்தால்
    தலையிடி காய்ச்சல் எல்லாம்
    தவிடுபோல் பறந்திடுமே.////

    நல்ல மருத்துவம்!! தலைவலி என்று சாக்கு சொல்லி பள்ளி போகாமல் ஏய்க்கும் குழந்தைகளுக்கோ இந்தப்பாட்டு!!

    ReplyDelete
  4. உங்கள் முதல் வரவுக்கு நன்றி சார். முழுப் பாட்டையும் அப்படியே மனப் பாடம் பண்ணி விட்டீர்கள் போலிருக்கிறது.

    ReplyDelete
  5. யாருக்காவது வந்தா சொல்லுங்க!
    கல்ல தூக்கி போட நான் வர்றேன்!

    ReplyDelete
  6. ரெடியா இருங்க வால்பையன்! எனக்கே நீங்கள் கல்லுத் தூக்கிப் போடா வேண்டி இருக்கும். உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!