என் வாழ்க்கைப் பயணத்தில் நான் சந்தித்தவர்கள் பலவிதம். எனது அனுபவங்கள் என்னைப் பொறுத்த வரையில் எனது பொக்கிஷங்கள்.
அவற்றிற்கு நிகர் வேறெதுவுமில்லை . நல்லதோ ,கெட்டதோ எதையும் நான் மறக்க விரும்பவில்லை. இறந்த காலங்கள் சிலரைக் குத்திக் குதறி அவர்கள் எதிர்காலத்தை நாசம் பண்ணியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என் இறந்த காலம் எனக்குப் பாடம் புகட்டி , என்னைப் புடம் போட்டு பக்குவப் படுத்தியதைத்தான் நான் உணர்கிறேன்.
எனக்குப் பிடித்த கதைகளையும் .எனதும் என்னைச் சுற்றியுள்ளோரினதும் அனுபவங்களையும் , சிந்தனைகளையும் என் இனிய தமிழில் வடிக்கும் ஆவலில் இந்த வலையத்துக்கு அறிமுகமாகிறேன்.
என் எழுத்துக்கள் என் சிந்தனைத் துளிகளுக்கு ஒரு வடிகாலாக அமையும் என்று நம்புகிறேன். மாறாக அவை எவரையும் புண் படுத்தினால் என்னை மன்னித்து விடுங்கள். என் கருத்துக்கள் தப்பென்று கருதினால் ' ஒரு குட்டி நாய் குலைக்கிறது' என்று தள்ளிப் போய் விடுங்கள்.
//என் எழுத்துக்கள் என் சிந்தனைத் துளிகளுக்கு ஒரு வடிகாலாக அமையும் என்று நம்புகிறேன்.//
ReplyDeleteநிச்சயம் இது உங்கள் சிந்தனைத் துளிகளுக்கு ஒரு வடிகாலாக அமையும்...
நிறைய எழுதுங்கள்...முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் தமிழிச்சி...
நல்ல அறிமுகம்! தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
உங்கள் வருகைக்கும் வரவேற்பிற்கும் மிகவும் நன்றி.
ReplyDelete