பெருமை
உங்கள் ஓவியமோ, கவிதையோ முதல் பரிசைப் பெற்று விட்டாலோ ,பரீட்சையில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றாலோ, ஒரு விளையாட்டுப் பந்தயத்தில் நீங்கள் வெற்றியைத் தட்டிக் கொண்டாலோ, நீங்கள் பூரித்துப் போய் விடுவதில்லையா? அதைவிட முக்கியமாக, உங்கள் நண்பர்களும் , உறவினர்களும் உங்களைச் சுற்றிக் கொண்டு 'அபாரம் ','அற்புதம்' என்று போற்றும்போது பெருமைப் பட்டு மகிழ்ந்து போவதில்லையா? இதில் எந்தத் தப்புமே கிடையாது.
அடுத்தமுறை இதேபோல ஒரு வெற்றியை நீங்கள் காணும்போது இதே புகழ்ச்சியை நீங்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். ஏதோ காரணத்தால் அது கிடைக்காவிட்டால் மனமொடிந்து போய் விடுவீர்கள். அந்த வெற்றியை திரும்பவும் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இழந்து விடுவீர்கள். இதற்குக் காரணம் எம்மை அறியாமலேயே இந்தப் புகழ்ச்சிகளுக்கு நாங்கள் அடிமைப் பட்டுப் போவதுதான்.
நீங்கள் பெரியவர்களாகும் போது எப்போதும் மற்றவர்களின் பாராட்டைத் தேடுகிறீர்கள் .நீங்கள் 'சமூக சேவை செய்கிறேன்' 'கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலைக் கட்டுகிறேன் ' 'என் தமிழ் இனத்துக்குச் செய்கிறேன்' என்று சொன்னாலும் ,அடிப்படை உண்மை என்னவென்றால் , நீங்கள் செய்வது பலருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ,உங்கள் மகிழ்ச்சிக்காக தான் இதனைச் செய்கிறீர்கள் . இதனால் நீங்கள் செய்யும் சேவைகளின் பலனையும் இழந்து விடுகிறீர்கள்.
சிந்தித்துப் பார்க்கையில் , எங்கள் வாழ்க்கையில் நாம் சாதித்தச் சின்னச் சின்ன வெற்றிகளும் .அதற்குக் கிடைத்த அபாரமான எமது பெற்றோரின் பாராட்டுக்களும்தான் எங்களை இப்படி இந்த நோய்க்கு அடிமையாக்கி விட்டது என்று தோன்றுகிறது. ஆனால் அதைத்தானே இப்போ நான் என் பிள்ளைகளுக்கும் செய்து கொண்டிருக்கிறேன்!
இந்த நோயைத் தடுப்பது எப்படியென்று தடுமாறி நிற்கிறேன்.
.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.. பலரையும் கருத்துகளை பதிவு செய்யாமலே போகச் செய்துவிடும்..
ReplyDelete//இந்த நோயைத் தடுப்பது எப்படியென்று தடுமாறி நிற்கிறேன்.//
ReplyDeleteநாம் எல்லோருக்கும் இந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது...
நல்ல பதிவு தமிழிச்சி...
நான் இத்தனை எழுதிய பின்பும் என்னைப் பாராட்டுகிறீர்களே சார்! ha ha ha
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி வசந்த். இந்த வலையத்துக்கு நான் கன்றுக் குட்டி.
ReplyDeleteதினமும் ஒன்று கற்றுக் கொள்கிறேன்.
புகழ்ச்சியே வேண்டாம் என நினைப்பவர்கள்
ReplyDeleteகருத்துகளே சொல்ல இயலாது.
புகழ்ச்சிக்காக மட்டுமே கருத்து சொல்வது தான் தவறு.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜமால்
ReplyDelete