Monday, 13 July 2009

என் சிந்தனைத் துளிகள் - ஆனந்தம்

நீராடி, நல்ல உடையுடுத்து, அலங்கரித்து கண்ணாடியில் உங்களுருவத்தைப் பார்க்கும் போது, மனதில் ஒரு ஆனந்தம் வருவதில்லையா? நீங்கள் படித்து பல பட்டங்கள் பெற்று உங்கள் பெயரின் பின்னால் சில எழுத்துக்களைச் சேர்க்கும் போதும் , காதலித்தவரை மணர்ந்து , பிள்ளைகளைப் பெறும் போதும், அடிமனத்தில் ஆனந்தம் இருப்பதில்லையா? சொல்லப் போனால் இவையெல்லாம் ஆனந்தம் என்று சொல்லிவிட முடியாது. அப்படியானால் பட்டப் படிப்புப் படித்தவன் ஒரு சில வருடங்களில் வாழ்க்கை வெறுத்துத் திரிவதில்லையா? காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள் மனம் வெறுத்துப் போவதில்லையா? பூக்கும் பூக்களெல்லாம் ஒரு நாள் சருகாவது போல இந்தச் சின்னச் சின்ன ஆனந்தமும் ஒரு நாள் வடிந்து போகும். அதனால் நிரந்தர ஆனந்தம் என்னவென்று நாங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஆனந்தம் என்பது நீங்கள் தேடித் போய் அடைந்து கொள்ளும் பொருளல்ல. அது ஒரு விசித்திரமான உணர்வு. அது நீங்கள் அதனைத் தேடாதபோது உங்களை ஆச்சரியப் படுத்த உங்கள் முன் வந்து நிற்கும். நீங்கள் இதுவரை கவனித்தீர்களோ என்னவோ ! உங்கள் மனதினில் இருந்து எப்போ பயத்தைப் போக்குகிறீர்களோ , அப்போ உங்கள் சிந்தனை தெளிவாகும். மனதில் ஆனந்தம் தாண்டவமாடும். நீங்கள் எதற்கோ, எவருக்கோ பயப்படும் போது நீங்கள் ஆனந்தமாயிருந்ததுண்டா? நாங்கள் சிறு வயதில் பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் , நண்பர்களுக்கும் பயப்படுகிறோம். சிறிது வளர்ந்தபின் பரீட்சையில் தேறமாட்டோமா ? என்றும் , நினைத்த வேலை கிடைக்காதோ என்றும் , காதலில் தோற்று விடுவோமோ ? என்றும், உண்மையை துணிந்து சொல்வதற்கும் ... இப்படி எத்தனையோ வகையாக நாம் தினம் தினம் பயப்படுகிறோம்.
முதலில் உங்கள் மனத்திலிருந்து பயத்தைப் போக்குங்கள். அதன் பக்க விளைவு தான் ஆனந்தம். நான் சரியா இல்லையா என்று சொல்லுங்கள்.

''Happiness is a result, a by product''


.

5 comments:

  1. உங்கள் வெளிப்பாட்டில் இருக்கிறது ஆனந்தம். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் திருவள்ளுவர், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றிருப்பார்.

    ReplyDelete
  2. Happiness are feelings through our senses or content of our mind after fulfilling our desires/wants or thinking about good experiences in the past or dreaming about future!

    ReplyDelete
  3. //குடந்தை அன்புமணி said...

    '' இதைத்தான் திருவள்ளுவர், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றிருப்பார்.//

    கருத்துக்கு நன்றி அன்புமணி.சரியாகத்தான் சொன்னீர்கள்.

    ReplyDelete
  4. //Shan Nalliah / GANDHIYIST said...
    Happiness are feelings through our senses or content of our mind after fulfilling our desires/wants or thinking about good experiences in the past or dreaming about future!//
    Sorry to say this,you didn't understand what I am talking about.
    Everlasting happiness is in none of these things you mentioned. You may have pleasure, you may find satisfaction, but sooner or later it becomes wearisome. Everything withers, decays.There is no end for human desire and dream.You will be chasing your dreams all your life.

    ReplyDelete
  5. நீங்கள் சிறப்பான கருத்தை சொல்லி உள்ளீர்கள்.
    பயம், தவறான ஆசைகள் இவைகள் தான் மனதின் அமைதியை எடுத்துச் செல்கின்றன.

    சந்தோஷம் அமைதியல்ல
    அமைதியே சந்தோஷம்.

    அன்புடன் என் சுரேஷ்

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!