தாய்வான் நாட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுவொன்று அவர்களது ஐந்து வருட ஆராய்ச்சியின் பலனாக , மனித சரித்திரத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டிய ஒரு சிறிய கருவியொன்றை உருவாக்கியுள்ளார்கள். இது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு கிட்டத் தட்ட 30 செக்கன்களுக்கு முன்னர் அதனைக் கண்டு பிடிக்கும் வல்லமை உள்ளது . அதுமட்டுமல்லாமல் அதன் இடத்தையும் , பரிமாணத்தையும் தெரிவிக்கக் கூடியதாகவும் பாதுகாப்புச் செய்திகளை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
இக்கருவி ஒரு வீடியோ டேப் அளவான , உலோகத்தால் செய்யப்பட்ட பொருள். இதன் தொழில் நுட்பம் அதில் அமைக்கப் பட்ட ஒரு சில டொலர்கள் பெறுமதியான 'சிப் ' இல் தங்கியுள்ளது. இதனால் இதனை மலிவான விலையில் உற்பத்தி செய்ய முடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள். ( அண்ணளவாக $300)
இவர்களது கண்டுபிடிப்பு உண்மையானது என்று அங்கிகரிக்கப் பட்டால் விரைவில் இந்த உபகரணம் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ( 30 செக்கனில் நிலநடுக்கமென்றால் தலை தெறிக்க ஓடி வெட்ட வெளியில் நிற்க மாட்டோமா?) இந்தக் கருவி முதன் முதலாக மத்திய காலநிலை ஆராய்ச்சி நிலையங்களிலும் , அரசாங்கக் கட்டிடங்களிலும் , பாடசாலைகளிலும் அதுபோன்ற முக்கிய பொது இடங்களில் பொருத்தப் படலாம் என எதிர்பார்க்கிறார்கள்.
தற்போது இந்த ' உயிர் காக்கும் கருவி' யை எப்படி ஒரு கணினிக்கு இணைத்து ,அதன் மூலம் முக்கியமான இடங்களுக்கு இந்த எச்சரிக்கையை துரிதமாகக் கடத்தலாம் என்பதை இக்குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
.
பயனுள்ள தகவல்...
ReplyDeleteபகிர்ந்ததற்க்கு நன்றிகள்!!